ரூ.800 கோடி பட்ஜெட்டில் பிரமாண்ட படங்கள்...ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (17:32 IST)
இந்தியாவில் ரூ.800 கோடி செலவில் இரண்டு பிரமாண்ட படஙக்ள் உருவாகவுள்ளது. இது உலக சினிமா ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல நடிகர் பிரபாஸ் ராமராகவும் கீர்த்தி சனான் சீதையாகவும் நடிக்க இருக்கும் படத்தில்  ராவணனாக  சயிப் அலிகான் , நடிக்க உள்ளார். இந்தப் படம் ரூ 500 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளது என்பதும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் உள்ள இந்த படத்தில் பணிபுரிவதற்காக அவதார் பட குழுவினர் இணைந்து உள்ளதாக சற்றுமுன் தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த குழுவினர்களுக்கு மட்டும் பல கோடிகள் சம்பளம் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தப் படம் இந்திய திரையுலகிலேயே மிகப்பெரிய சாதனை செய்யும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் அல்லு அரவிந்த் தயாரிப்பில் ராமாயண் என்ற ஒரு படம் தயாராகவுள்ளது. இதில் ராமனாக ஹிருத்திக் ரோசனும், சீதா காதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடிக்கவுள்ளார்.


இப்படத்திற்கான காஸ்ட்யூம் , மேக் அப்பிற்காக ஹாலிவுட் கலைஞர்கள் பயன்படுத்தப்படவுள்ளனர். இந்தியாவில் வெளியான ராமாயணப் படங்களில் இதுதான அதிக பட்ஜெட் படம் எனவும் கூறப்படுகிறது.

 மேலு, ஆதிபுருஷ், ராமாயண் ஆகிய இரு படங்களைத் தவிர சீதா என்ற ஒரு படமும் ரூ100 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாகுபலி படத்தின் வெற்றி மற்ற இயக்குநர்களையும் பாரதக் கதைகளை நோக்கி ஈர்த்துள்ளது எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்