பிரியாணி சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு… ஓட்டல் உரிமையாளர் கைது!

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (17:16 IST)
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் பிரியாணி சாப்பிட்ட சிறுமி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் மணிகூண்டு அருகே இயங்கி வரும் உணவகத்தில், விற்கப்படும் பிரியாணியை ஆனந்த் என்பவர் குடும்பத்தினருடன் சென்று தந்தூரி பிரியாணி சாப்பிட்டுள்ளார். அதை சாப்பிட்டதில் இருந்தே ஆனந்தின் மனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டு வாந்தி எடுத்துள்ளார்.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இதே போல அந்த ஓட்டலில் உணவு சாப்பிட்ட 20 பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலிஸார் அந்த உணவகத்தை மூடி சீல் வைத்து உரிமையாளர் மற்றும் சமையல் மாஸ்டரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்