இந்தியன் 2 படத்தில் ‘கைதி’ கான்ஸ்டபிளுக்கு முக்கிய கேரக்டர்!

Webdunia
செவ்வாய், 29 அக்டோபர் 2019 (20:52 IST)
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஆந்திராவில் நடைபெற்றது. தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்காக ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வரும் நவம்பர் இரண்டாவது வாரம் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என தெரிகிறது 
 
இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது ’கைதி’ படத்தில் நடித்த ஜார்ஜ் மரியான் என்பவர் இணைந்துள்ளார். இவர் கார்த்தியின் ’கைதி’ படத்தில் கான்ஸ்டபிள் நெப்போலியன் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே
 
கமல்ஹாசன், ரகுல் ப்ரீத்திசிங், காஜல் அகர்வால், ப்ரியா பவானிசங்கர், சித்தார்த், விவேக், கிஷோர் ,வித்யுத் ஜம்வால், சமுத்திரகனி, நெடுமுடிவேணு, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ரத்னவேலு ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் 2021ஆம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்