லோகேஷ் படத்தின் நான் நடிக்கின்றேன்.. உறுதி செய்த பிரபல இயக்குனர்

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (09:44 IST)
லோகேஷ் கனகராஜ் படத்தில் நான் நடிக்கிறேன் என பிரபல இயக்குனர் சமீபத்தில் அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார்.
 
லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படமான ’தளபதி 67 படத்தில் சஞ்சய் தத் கௌதம் மேனன் நிவின் பாலி அர்ஜுன் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நாயகியாக திரிஷா நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
 
இருப்பினும் படக்குழுவினர் இந்த படத்தில் இன்னும் யார் யார் நடிக்கின்றனர் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இயக்குனர் கௌதம் மேனன் லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் தான் நடிப்பதாகவும் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்றும் கூறியுள்ளார். 
 
இதனை அடுத்து தளபதி 67 படத்தில் கௌதம் மேனன் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்