நடிகர் கொட்டாச்சியை அடித்து உதைத்த கும்பல் ; பணம், நகை, செல்போன் பறிப்பு

Webdunia
திங்கள், 26 ஜூன் 2017 (19:44 IST)
தமிழ் சினிமாவில் சில படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் கொட்டாச்சி.


 

 
நடிகர் விவேக்குடன் இவர் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விருமாண்டி படத்திலும் இவர் நடித்துள்ளார்.
 
இந்நிலையில், இவர் நேற்று இரவு சேலத்திற்கு சென்று, அங்கு ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். அதன்பின் அவர்  அங்கிருந்து ஆட்டோவில் ஏறி சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.
 
அப்போது அவரை சிலர் வழி மறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிலர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவரை அடித்து உதைத்த அந்த கும்பல், அவரிடமிருந்து ரூ.3 ஆயிரம் பணம், செல்போன் மற்றும் 2 சவரன் தங்க நகை ஆகியவற்றை பறித்துக்கொண்டு சென்றுவிட்டது.
 
இதையடுத்து இன்று காலை, அந்த பகுதியிலிருக்கும் காவல் நிலையத்திற்கு சென்ற கொட்டாச்சி, தன் மீது தாக்குதல் நடத்தி, பணம் முதலியவற்றை பறித்து சென்ற கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.
 
அவரது புகாரின் அடிப்படையில், அந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்