விஜய் டிவியில் பிக்பாஸ் - கலக்கல் மீம்ஸ்...

Webdunia
திங்கள், 26 ஜூன் 2017 (19:17 IST)
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று துவங்கப்பட்டது. இதில் நடிகை நமீதா, ஓவியா, ஆர்த்தி, அனன்யா, நடிகர்கள் ஸ்ரீ, கணேஷ் வெங்கட்ராம், கஞ்சா கருப்பு, பாடகர் சினேகன் உள்ளிட்ட 15 பேர் கலந்து கொள்கின்றனர்.


 

 
அதில் மொத்தம் 14 பிரபலங்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் இருக்க வேண்டும். அவர்களே உணவை சமைத்து உண்ண வேண்டும்,  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் செல்போனை எடுத்து செல்லக்கூடாது. அதேபோல், இணையம் முதல் எந்த வெளியுலக தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் இருக்க வேண்டும் என்பதும் முக்கிய விதிமுறையாகும்.


 

 
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே ஃபீல்ட் அவுட் ஆன நடிகர், நடிகையர் என்பதால் முதல் நாளிலேயே நிகழ்ச்சி களையிழந்ததாக டுவிட்டரில் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் நேற்று முன் தினம் வெளியான பட்டியலில் உள்ள ஒருவர் கூட விஜய் டிவியின் பட்டியலில் இல்லை.  எனவே, இந்த நிகழ்ச்சி தொடங்கிய உடனேயே நெட்டிசன்கள் மீம்ஸ்களை சமூகவலைத்தளங்களில் அள்ளித் தெளித்தனர்.
 
அவற்றில் சில உங்கள் பார்வைக்கு... 


அடுத்த பக்கம் பார்க்க...
 






அடுத்த கட்டுரையில்