பாரதிராஜா பட லுக்கில் ஜீவி.பிரகாஷ், மனிஷா யாதவ்

Webdunia
புதன், 25 மார்ச் 2015 (16:01 IST)
ஆதிக் இயக்கும் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படப்பிடிப்பு பிஸியாக போய் கொண்டிருக்கிறது. முத்தம் கொடுத்த மாயக்காரி எனத் தொடங்கும் பாடலை சமீபத்தில் ஜீ.வி.பிரகாஷ், மனிஷா யாதவை வைத்து படமாக்கினர்.
 

 
இந்தப் பாடலை கொஞ்சம் வித்தியாசமாக படமாக்கியுள்ளனர். எப்படி? பாடல் நெடுக பாரதிராஜாவின் பழைய படங்களில் வரும் ஹீரோக்களின் கெட்டப்பில் நடித்துள்ளார் ஜீவி.பிரகாஷ். மனிஷா யாதவுக்கு பாரதிராஜா படங்களின் ஹீரோயின்களின் கெட்டப். 
 
இந்தப் பாடல் பாரதிராஜாவுக்கு எங்களின் மரியாதை என்று தெரிவித்தார் ஆதிக். டண்டணக்கா மாதிரி அவமரியாதையாகாமல் இருந்தால் சரிதான்.