சந்தானம் இப்போது ரத்னகுமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் காட்சிகள் பெரும்பாலும் படமாக்கப்பட்டு விட்டது.
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். ஆனால் பெரும்பாலான அவரது படங்கள் வெற்றிப் பெறுவதில்லை. இந்நிலையில் தன்னிடம் கதை சொல்ல வரும் புதுமுக இயக்குனர்களையும் அவர் மதிப்பில்லையாம். சமீபகாலமாக அவர் நடிப்பில் ஏ 1 மற்றும் பாரிஸ் ஜெயராஜ் ஆகிய படங்கள் மட்டுமே ஓரளவு கவனம் பெற்றன.
இந்நிலையில் இப்போது சந்தானம் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் நேற்றில் இருந்து இந்த படத்தின் ஒரு டார்க் காமெடி படமாக உருவாகும் இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. ஆனால் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.
இந்நிலையில் இப்போது படத்தைப் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். அதே போல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்தான் இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளாராம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.