சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் இவரா? வைரலாகும் டுவிட்

புதன், 17 நவம்பர் 2021 (16:15 IST)
சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற நிலையில் அவர் தற்போது டான், அயலான், மற்றும் சிங்கப்பாதை ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகும் படம் ஒன்றில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார் என்பதும் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் என்பவர் இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் இந்த படத்திற்கு தற்போது தமன் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமன் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகவும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்