எம்ஜிஆரின் படங்களுக்கு வசனம் எழுதிய ஆர்கே சண்முகம் காலமானார்

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2017 (15:39 IST)
எம்ஜிஆர், சிவாஜி படங்களுக்கு கதை வசனம் எழுதிய ஆர்கே சண்முகம் காலமானார். அவருக்கு வயது 87.

 
ஆர்கே சண்முகம் தமிழ் சினிமா உலகில் தொழிலாளியாக இருந்து படிப்படியாக இயக்குநர் பிஆர் பந்துலுவின் உதவி  இயக்குநராக மாறினார். சிவாஜி கணேசன் நடித்த கப்பலோட்டிய தமிழன் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியுள்ளார். பின்னர்  எம்ஜிஆர் படங்களுக்கு ஆஸ்தான வசனகர்த்தாவாகா மாறினார். 
 
எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், சிரித்து வாழ வேண்டும், ரகசிய போலீஸ் 115, பல்லாண்டு வாழ்க, ஊருக்கு  உழைப்பவன், தலைவன், தேடி வந்த மாப்பிள்ளை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.
 
ஆர்கே சண்முகம் 1980-ல் கலைமாமணி விருது பெற்றுள்ளார். எம்ஜிஆர்தான் லாயிட்ஸ் சாலையில் உள்ள ஒரு வீட்டை பரிசாக  வழங்கினார். அந்த வீட்டில்தான் ஆர்கே சண்முகம் உயிர் நேற்று பிரிந்தது. ஆர் கே சண்முகத்துக்கு மனைவி தேவி (75), நான்கு மகள்கள் உள்ளனர்.
 
சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்