ஜூலிக்காக ஓவியா செய்த காரியம் என்ன தெரியுமா - வீடியோ இணைப்பு!

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2017 (12:31 IST)
பிரபல தொலைக்காட்சியில் 100 நாட்கள் நடைப்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் பேரதவை பெற்றவர், அப்போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர் நடிகை ஓவியா. ஓவியாவின் குணத்தால் அவருக்கு, ஓவியா ஆர்மியை தொடங்கி அசத்தினர் ரசிகர்கள்.

 
இந்நிலையில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியாவிற்கு மக்களின் ஆதரவு பெருகியதை அடுத்து, படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடிக்க ஒப்பந்தமும் ஆகியிருக்கிறார். இதற்கிடையில் சமூக வலைதளங்கள் அவ்வப்போது தனது  ரசிகர்களையும் சந்தித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஓவியா தனது ரசிகர்களிடம் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை  விடுத்துள்ளார். 
 
அதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜூலி சென்னை தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது  ஜூலியை, அக்கல்லூரியில் உள்ள ஓவியா ரசிகர்கள், பேச விடாமல் அவமானப்படுத்தி அனுப்பினார்கள். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த விவகாரம் குறித்து தனது ரசிகர்களிடம் பேசியுள்ள ஓவியா, ஜுலியை எதுவும் செய்யாதீர்கள், தயவுசெய்து எதுவும் செய்யாதீர்கள் ஓவியா ஆர்மி மக்களே என்று கேட்டுக் கொண்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
ஓவியாவின் இந்த நடவடிக்கையின் மூலம், அவருக்கு நாளுக்குநாள் ரசிகர்களின் ஆதரவு பெருகிக்கொண்டே போகிறது.
 
நன்றி: Cineulagam

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்