அசோக் செல்வனுக்கு விட்டுக்கொடுத்த நிவின் பாலி

Webdunia
புதன், 19 ஜூலை 2017 (12:21 IST)
நிவின் பாலியின் கால்ஷீட் கிடைக்காததால், அவருக்குப் பதில் அசோக் செல்வன் நடித்துள்ள படம்தான் ‘கூட்டத்தில்  ஒருவன்’.

 
 
பத்திரிகையாளராக இருந்து இயக்குனராக மாறியிருக்கிறார் த.செ.ஞானவேல். இவர் இயக்கியிருக்கும் ‘கூட்டத்தில் ஒருவன்’ படத்தில், அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். சமுத்திரக்கனி,  அனுபமா குமார் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு, நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
 
இந்தக் கதையை நிவின் பாலியை மனதில் வைத்துத்தான் எழுதினாராம் இயக்குனர். நிவின் பாலியிடமும் அவர் கதை  சொல்லியிருக்கிறார். நிவின் பாலிக்கு இந்தக் கதை பிடித்துப் போனாலும், அவருடைய கால்ஷீட் இல்லாததால் நடிக்க  முடியவில்லையாம். கடைசியில் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா மூலம் அசோக் செல்வன் கிடைத்திருக்கிறார். விரைவில் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.
அடுத்த கட்டுரையில்