வெள்ள நிவாரணப் பணிகளில் விஜய் ரசிகர்கள்

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2015 (10:45 IST)
தமிழகத்தில் பெய்த கன மழையால் சென்னை உள்பட பல மாவட்டங்கள் வெள்ளக்காடாயின.


 

 
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களாலான உதவிகளை அனைத்துத் தரப்பு மக்களும் செய்து வருகின்றனர்.
 
தென்னிந்திய நடிகர் சங்கம் நிவாரணப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.
 
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தினரும் நிவாரணப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
 
நடிகர் விஜய் ஏற்பாட்டில் வெள்ளம் பாதித்த கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகளில் உதவிப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
 
அதனை விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்து வருகின்றனர்.