பல்யடித்த சங்கத் தலைவர்… பரிதாபத்தில் தயாரிப்பாளர்கள்

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (18:02 IST)
சங்கத் தலைவரின் புது அறிவிப்பால் மகிழ்ந்த தயாரிப்பாளர்கள், அவர் அடித்த பல்டியால் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.



 
ஃபெப்சியில் இருப்பவர்களைக் கொண்டுதான் ஷூட்டிங் நடத்த வேண்டும் என காலம் காலமாக நடைமுறை இருந்து வந்தது. இதனால், பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டனர். பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவரும் சங்கத் தலைவரான உயர நடிகர், ‘இனிமேல் யாரை வைத்து வேண்டுமானாலும் ஷூட்டிங் நடத்தலாம்’ என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதனால், பல தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவரை எதிர்த்தவர்கள் கூட சங்கத் தலைவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால், இதை எதிர்த்து ஃபெப்சி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது. முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, மறுபடியும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது. நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில், தன் முடிவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக சங்கத் தலைவர் கூறியுள்ளாராம். இதனால், தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தலைவரின் இந்த திடீர் பல்டிக்கு காரணம் தெரியாமல் அவர்கள் குழம்பியுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்