போங்கடா முட்டாளுகளா..! – முருக கடவுளுக்கு ஆதரவாக இறங்கிய நடிகர்கள்!

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (10:33 IST)
யூட்யூப் சேனல் ஒன்றில் கடவுள் முருகனை அவதூறாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்து நடிகர்கள் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

கடவுள் மறுப்பு இயக்கத்தை சேர்ந்த கருப்பர் கூட்டம் என்ற யூட்யூப் சேனல் ஒன்றில் முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும் கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்து மத கடவுள்களை கொச்சைப்படுத்தி மதரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தும் அந்த யூட்யூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து அமைப்புகள் சில காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளன.

இந்நிலையில் தமிழ் கடவுள் முருக்னை குறித்து அவதூறு பேசியதற்கு திரைப்பட ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்னும் நட்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் “போங்கடா முட்டாளுகளா.. முருகனை பத்தி சொல்ல சிவனாலேயே முடியாதுடா! சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் கிடையாது, சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் கிடையாது.. சரவணபவாய நமஹ” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து பிரசன்னா, எஸ்.வி.சேகர், விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் முருகன் சர்ச்சை குறித்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்