பிரபல நடிகை உடல்நலக்குறைவு....ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (18:56 IST)
முன்னாள் செய்தி வாசிப்பாளரும், தமிழ் சினிமா நடிகையுமான பாத்திமா பாபு  உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஜெயா தொலைக்காட்சி உள்ளிட்ட முன்னணி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர்   சின்னத்திரை நடிகையாகவும், தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாகவும் இருப்பவர் நடிகை பாத்திமா பாபு.

இவர் சரோஜா உள்ளிட்ட சில படங்களில் நடித்ததுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மக்கள் மனதில் பிரபலமாகியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் இதற்கான அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருபதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து நடிகை பாத்திமா பாபு, கடந்த 26 ஆம் தேதி தனக்கு சிறுநீரகத்தின் கற்களுக்கான அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்