தர்பார் படத்தில் சசிகலாவை குறிப்பிடும் விதமாக வந்த ஜெயில் சம்பந்தப்பட்ட வசனம் ஒன்றை நீக்கியதை அடுத்து முருகதாஸ் ரசிகர்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
தர்பார் படத்தில் சிறையில் செல்போன் உபயோகிப்பது போன்ற காட்சி ஒன்றில் சிறையில் இருந்தபடியே ஷாப்பிங் கூட செல்லலாம் என்று ஒரு வசனம் வைக்கப்பட்டிருந்தது இது சிரி பெங்களூரு சிறையில் இருக்கும் ஆமாம் முகா தலைவர் சசிகலாவை குறிப்பிடும் விதமாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த வசனம் உடனடியாக படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு இவ்வளவு பவரா என ஒருபுறம் கேள்வி எழ, மருபுறம் முருகதாஸை கேலி செய்யவும் ஆரம்பித்துள்ளனர். இதற்கு காரணம் இது போல் இதற்கு முன்பும் சில படங்களில் முருகதாஸ் வசனங்களை வைப்பதும் பின்பு அதனை நீக்குவது என பணிந்து போயுள்ளார் என்பதுதான்.
உதாரணமாக ஏழாம் அறிவு படத்தில் இலங்கை தமிழர்கள் பற்றி ஒரு வசனம் வரவே அதற்கு சில இடங்களில் இருந்து எதிர்ப்பு எழுந்தது. உடனடியாக படத்தின் வசூல் பாதிக்கும் என அந்த வசனத்தை மியூட் செய்து பணிந்து போனார் முருகதாஸ். அதேபோல அதே படத்தில் போதிதர்மர் தமிழர் என்றும் தமிழ் பதிப்பிலும் தெலுங்கு வெர்ஷனில் ஆந்திராவை சேர்ந்தவர் என்றும் மாற்றி போட்டு ரசிகர்களின் பொதுபுத்தியை சுரண்டியவர் முருகதாஸ்.