ராஜமௌலி படத்தை புறக்கணிப்போம்..!? – திடீரென ட்ரெண்டிங்! காரணம் என்ன?

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (12:22 IST)
ராஜமௌலி இயக்கத்தில் நாளை வெளியாகவுள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தை புறக்கணிக்க வேண்டுமென ட்ரெண்டிங் ஆவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி,ஆர், ஆல்யா பட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியாக உள்ளது. முன்னதாக ஜனவரி மாதம் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா காரணமாக நாளை வெளியாக உள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவில் ஆர்.ஆர்.ஆர் படத்தை புறக்கணிக்க வேண்டும் என சிலர் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். கர்நாடகாவில் ஆர்.ஆர்.ஆர் கன்னட மொழியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல திரையரங்குகளில் தெலுங்கில் வெளியாவதாக தெரிகிறது. இதனால் ஆர்.ஆர்.ஆர் படத்தை புறக்கணிக்க வேண்டும் என ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள படக்குழு ஆர்.ஆர்.ஆர் படம் கன்னடம் மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டு உள்ளதாகவும், ஆனால் கர்நாடகாவில் சில திரையரங்குகள் மட்டுமே கன்னட மொழியில் வெளியிடுவதாகவும், பின்னாட்களில் மற்ற திரையரங்குகளும் முன்வந்து கன்னடத்தில் திரையிடுவார்கள் என்று நம்புவதாகவும், ரசிகர்கள் படம் வெற்றியடைய உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்