''கிச்சா 47'' படத்தில் இணைந்த பிரபல நடிகை

Webdunia
சனி, 21 அக்டோபர் 2023 (20:05 IST)
கன்னட  சினிமாவின் முன்னணி நடிகர் சுதீப். இவர் பின்னணி பாடகர், எழுத்தாளர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் எனப் பன்முக கலைஞராக இருக்கிறார்.

இவர், , கிச்சா, தம், நந்தி, சந்து, விஜய்யுடன் இணைந்து புலி, நான் ஈ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இன்று  கன்னட சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான கிச்சா சுதீப், இயக்குனர்  சேரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, பொற்காலம், பாண்டவர் பூமி, பொக்கிஷம் உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கிய சேரன் இயக்கத்தில் கிச்சா சுதீப் நடிக்கவுள்ள ‘கிச்சா47’ பட அதிகாரப்பூர்வ அறிவிப்பை  சத்யஜோதி பிலிம்ஸ் வெளியிட்டது.

சேரன்- சுதீப் இணைந்துள்ள இப்படத்திற்கு தென்னிந்திய சினிமாவில்  எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கிச்சா 47 படத்தில் இன்று பிரபல நடிகை ஸ்ரீ நிதி ஷெட்டி இணைந்துள்ளார். இன்று அவருக்கு அவருக்கு பிறந்த நாள் என்பதால் அவருக்கு வாழ்த்துகள் கூறி, இப்படத்தில் அவரை வரவேற்பதாக படக்குழு ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

இது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்