கெடுக்க நினைத்த நடிகர்: எஸ்கேப் ஆன இரு நடிகைகள்

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (09:12 IST)
96 படத்தின் 100வது நாளில் பேசிய பார்த்திபன் பல ஹைலைட்டான விஷயங்களை பேசினார், பேசியதோடு மட்டுமில்லாமல் செய்தும் காட்டினார்.
 
சென்னையில் '96' படத்தின் 100வது நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் கேடயம் கொடுத்து கெளரவிக்கப்பட்டது. இதில் இயக்குனர் சேரன், பார்த்திபன், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பங்குபெற்றனர். இதில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றது.
 
இந்நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன் '96' திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு காதல் படமாக இருந்தாலும் அந்த படத்தில் நாயகன், நாயகி கடைசி வரை கட்டிபிடிக்கவே மாட்டார்கள். அது ரசிகர்களிடையே ஏக்கமாக இருக்கிறது. இப்பொழுதாவது விஜய்சேதுபதி, த்ரிஷாவும் மேடைக்கு வந்து ஒரே ஒருமுறை கட்டிப்பிடித்து ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்ய வேண்டும் என பார்த்திபன் கேட்டுக்கொள்ள, அதனையேற்று மேடைக்கு வந்த விஜய்சேதுபதி, த்ரிஷா கட்டிப்பிடித்தனர். 
 
தொடர்ச்சியாக பேசிய அவர்  பல நடிகைகளை என் படத்தில் நடிக்க வைத்து அவர்களின் வாழ்க்கையை கெடுக்க நினைத்தேன். ஆனால் என படங்களில் சிக்காமல் தப்பித்தது திரிஷாவும் நயன்தாராவும் தான் என நகைச்சுவையாக பேசினார்.
 
அத்தோடு '96; படக்குழுவினர்களுக்கு நடிகர் பார்த்திபன் வித்தியாசமான பரிசு ஒன்றை அளித்தார். '96' என்பதை குறிப்பிடும் வகையில் 9 மற்றும் 6 எண்கள் மட்டுமே கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த கடிகாரம் படக்குழுவினர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் கவர்ந்தது. என்ன தான் இருந்தாலும் பார்த்திபனின் அழகி படம் வேற லெவல் தான்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்