பிரபல விஜய் டிவி ரியாலிடி ஷோ டான்ஸர் விபத்தில் பரிதாப பலி

Webdunia
வெள்ளி, 11 மே 2018 (11:47 IST)
விஜய் தொலைக்காட்சியில் வெளியான கிங்ஸ் ஆப் டான்ஸ் மூலம் பிரபலமான ஹரி, பைக் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியுள்ளது.
விஜய் டிவி கிங்ஸ் ஆப் டான்ஸ் முதல் சீசனில் பங்குபெற்று அனைவரது பாராட்டுகளை பெற்றவர் தான் ஹரி(21), தனது தனித் திறமையின் மூலம் பலரது உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்தார்.
ஹரி தனது பைக்கில் சென்னை கதீட்ரல் சாலை அருகே சென்றபோது விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார். இந்த செய்தியைக் கேட்ட திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். ஹரியின் மரணத்திற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்