பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தரும் குடும்ப உறுப்பினர்கள்.. பூர்ணிமாவுக்கு ஷாக் கொடுத்த அம்மா..!

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2023 (12:46 IST)
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தருவதால் சென்டிமென்ட் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
பூர்ணிமாவின் அம்மா,  விக்ரம் சரவணனின் அம்மா அப்பா,  அர்ச்சனாவின் அம்மா அப்பா மற்றும் விஜய் வர்மாவின் அம்மா ஆகியோர் இன்றைய தினம் பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தருகின்றனர்  
 
குறிப்பாக பூர்ணிமாவின் அம்மா விசித்ராவிடம் தனது மகளுக்காக மன்னிப்பு கேட்கிறார், அதேபோல் அர்ச்சனாவுக்கு அவர் வாழ்த்து கூறுகிறார். இந்த இரண்டையும் பார்த்த பூர்ணிமா அதிர்ச்சி அடையும் காட்சிகள் இன்றைய ப்ரோமோ வீடியோவில் உள்ளன.
 
மொத்தத்தில் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை பிக் பாஸ் வீட்டை கலகலப்பாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்