”காளி இஸ் பேக்”: பேட்ட பராக்.... தலைவர் மரண மாஸ்

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2018 (18:35 IST)
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் பேட்ட. இந்த படத்தில், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படம் பொங்களுக்கு வெளியாக உள்ளது. 
 
பேட்ட படக்குழுவினர் அறிவித்தது போன்று, இன்று இப்படத்தின் மரண மாஸ் என்ற முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்து உள்ளது. 
 
அனிருத் வழக்கம் போல பாடலின் மூலம் படத்திற்கு ஹைப் ஏற்றிவிடார். மரண மாஸ் பாடலை அனிருத் மற்றும் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடியுள்ளனர். 
 
இந்த பாடலில் கவனிக்கப்பட வேண்டிய இரண்டு முக்கியமான விஷயங்கள் என்னவெனில் படத்தில் ரஜினியின் பெயர் காளி ஆக இருக்கலாம், மற்றொன்று பாபி சிம்ஹா படத்தில் ரஜினிக்கு வில்லனாக இருக்க வாய்ப்புகள் குறைவு. 
 
பொருத்திருந்து பார்ப்போம் படத்தில் வேறு என்னென்ன ஸ்பெஷல் இருக்குனு...

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்