எதிர்ப்புகளை மீறி கடலூர் மாவட்டத்திலும் வெளியானது ‘எதற்கும் துணிந்தவன்;

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (07:34 IST)
சூர்யா நடித்த  ‘எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதிகாலை 5 மணி காட்சி சற்றுமுன் முடிவடைந்த நிலையில் இந்த படத்திற்கு ஒரு சிலர் பாசிட்டிவ் விமர்சனங்களையும் ஒரு சிலர் நெகட்டிவ் விமர்சனங்களையும் தந்து கொண்டிருக்கின்றனர். 
 
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிட வேண்டாம் என பாமக சார்பில் கோரிக்கை விடப்பட்டு இருந்த நிலையில் இன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள பல திரையரங்குகளில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
எதிர்ப்புகளையும் மீறி திரையரங்குகளில் வெளியாகி உள்ள எதற்கும் துணிந்தவன் படத்தை சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் பார்த்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்