சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ டிரைலர் ரிலீஸ்!

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (10:59 IST)
சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் மார்ச் 11-ம் தேதி ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
 
ஆக்ஷன் காட்சிகள் ரொமான்ஸ் காட்சிகள் காமெடி காட்சிகள் என ஒரு கலவையான கமர்சியல் படமாக இந்தப் படம் இருக்கும் என டிரைலரில் இருந்து தெரியவருகிறது.
 
வழக்கமான சூர்யாவை தான் இந்த படத்தில் ரசிகர்கள் பார்க்க முடியும் என்றும் சூரரைப்போற்று ஜெய்பீம் போன்ற ஒரு வித்தியாசமான கேரக்டரில் சூர்யா இந்தப் படத்தில் நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
இருப்பினும் ஒரு சிறப்பான குடும்ப பாங்காக கமர்சியல் படமாக இருக்கும் எதற்கும் துணிந்தவன்’ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்