வெளியாகிறது எதற்கும் துணிந்தவன் டீசர் – சன் பிக்சர்ஸ் கொடுத்த அப்டேட்!

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (11:20 IST)
சூர்யா நடித்து விரைவில் வெளியாக உள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து தயாராகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் முதல் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளன. இந்நிலையில் படத்தின் டீசர் வெளியீடு குறித்து தற்போது சன் பிக்சர்ஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 18ம் தேதி 6 மணிக்கு எதற்கும் துணிந்தவன் டீசர் வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்