விக்ரம் நடிக்கும் ‘சியான் 62’ படத்தின் நாயகி அறிவிப்பு.. சூப்பர் தகவல்..!

Mahendran
புதன், 3 ஏப்ரல் 2024 (18:13 IST)
விக்ரம் நடிக்க இருக்கும் 62 வது படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்து அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.

விக்ரம் நடித்த ’துருவ நட்சத்திரம் ’ மற்றும் ’தங்கலான்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் 'சித்தா’ இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் எஸ்ஜே சூர்யா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி ஆக துஷாரா விஜயன் நடிக்க இருப்பதாக சற்று முன் போஸ்டர் மூலம் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே துஷாரா விஜயன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’வேட்டையன்’ மற்றும் தனுஷ் நடித்து வரும் ’ராயன்’ ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்