ரகுல் ப்ரீத் சிங்கிற்கும் தொடர்பு இருக்கு... கோர்த்துவிட்ட ரியா!

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2020 (17:32 IST)
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் தற்கொலை விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நடிகை ரியா சக்கரவர்த்தி அதன் பின்னர் திடீரென போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். மும்பையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்ததை அடுத்து அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்

சுஷாந்த் சிங் காதலி ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரும் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு சற்று முன்னர் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த புதன்கிழமை ரியா சக்கரவர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தினத்தில் அவரது வழக்கறிஞர் முன்ஜாமின் மனு ஒன்றை தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து 14 நாட்கள் நீதிமன்றக் காவலுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து தற்போது மீண்டும் ரியாவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு ரியாவை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

அப்போது சுஷாந்த் சிங்கிற்கு போதை பொருள் வாங்கியது குறித்து விசாரணை மேற்கொண்டதில் நடிகை ரகுல் ப்ரீத் சிங், பாலிவுட் நடிகை சாரா அலிகான், டிஷைனர் சிமோன் கம்பட்டா , பிரபல இயக்குனர் ஒருவர் உள்ளிட்டோருக்கு இந்த போதை பொருள் சப்ளை விவகாரத்தில் தொடர்பு இருந்தாகவும் அவர்கள் போதை பொருட்களை பயன்படுத்தியதாகவும்  ரியா போலீசாரிடம் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் கங்கனா ரனாவத் கூறியது போலவே பெரிய நட்சத்திரங்கள் பலர் சிக்குவார்கள் என்பது அம்பலமாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்