சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்துக்கு வந்த சிக்கல்… தள்ளிப்போகுமா?

Webdunia
ஞாயிறு, 7 மார்ச் 2021 (08:32 IST)
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் ரிலீஸ் இரண்டு வாரங்கள் தள்ளிப் போகலாம் என சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டது என்பது தெரிந்ததே. இருப்பினும் அயலான் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இருப்பதால் அந்த படம் இந்த ஆண்டு இறுதியில் தான் வெளியாகும் என்று கூறப்பட்டது.

ஆனால் அதே நேரத்தில் டாக்டர் திரைப்படம் மார்ச் 26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இப்போது தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் அதிகளவிலான பணப்புழக்கத்தை செய்வது சிரமமான காரியமாக இருக்குமாம். 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்ய உரிய ஆவணங்கள் வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இரண்டு வாரங்கள் தள்ளிப் போய் ரிலீஸாகலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்