கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக லாக்டவுன் அமலில் இருப்பதால் எந்த திரைப்படமும் வெளிவரவில்லை என்றாலும் புதிய திரைப்படங்கள் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன
அந்த வகையில் சற்றுமுன் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் ’டாக்டர்’ படத்தின் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற செல்லம்மா என்ற பாடல் வரும் 16ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இந்த பாடல் சமீபத்தில் தடை செய்யப்பட்ட டிக்டாக் குறித்த பாடல் என்பது குறிப்பிடதக்கது. இந்த பாடல் அனிருத், சிவகார்த்திகேயன், நெல்சன் ஆகியோர்கள் டிஸ்கஷன் செய்யும் 2 நிமிட வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளதால் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக வினய் நடிக்கவுள்ளார். மேலும் யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
#Chellamma arriving soon to sweep you off your feet!