டிக்டாக் போனால் என்ன ரீல்ஸ் இருக்கு... இணையத்தை கலக்கும் பிக்பாஸ் ஷெரின்!

சனி, 11 ஜூலை 2020 (08:24 IST)
கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பேமஸ் ஆனவர் நடிகை ஷெரின். ஆனால் அவர் இதற்கு முன் சிறுவயதாக இருந்தபோதே ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். “அழகிய அசுரா, அழகிய அசுரா” என்ற பாடலில் ஷெரின் எஸ்பிரஷனில் பலரும் மயங்கியதுண்டு.

அதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் சேர்ந்து நடித்துள்ளார். தனுஷின் முதல் படமான இதில் ஷெரின், அபிநய்,ரமேஷ் கண்ணா,தலைவாசல் விஜய்,விஜயகுமார், ஷில்பா போன்ற பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்தாலும் அவரை பிரபலப்படுத்தியது என்னமோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் ஷெரினிக்கு அழகு கூடிக்கொண்டே போகிறது. ஆம், பிக்பாஸில் இருந்ததைவிட தற்போது உடல் எடை குறைத்து ஒல்லியாக வலம் வருகிறார். டிக்டாக் அடிக்கடி கியூட்டான சில வீ டியோக்களை வெளியிட்டு வந்த ஷெரின் தற்ப்போது அது தடை செய்யப்பட்டுள்ளதால் இன்ஸ்டாகிராம் செயலியில் டிக்டாக் போன்றே இயங்கும் ரீல்ஸ் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

அதில் ஷெரின் செம கியூட்டான ரொமான்டிக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஷெரினின் அழகான எக்ஸ்ப்ரெஷன்ஸ் இணையவாசிகளை வெகுவாக கவர்ந்து அனைவரையும் ஈர்த்து வருகிறது. இதோ அந்த வீடியோ...
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Love you all! #reels #sherin #biggboss #biggbosstamil #feelitreelit #stayhome #staysafe

A post shared by Sherin Shringar (@sherinshringar) on

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்