திராவிட தளபதியாய் மிளிரும் விஜய்: இயக்குனர் புகழாரம்!!

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (12:42 IST)
இயக்குனர் பேரரசு நடிகர் விஜய் ரூ.1.30 கோடி கொடுத்ததற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 
 
நாடு முழுவதும் கொரோனா வைரஸால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் மக்களுக்கு உதவுவதற்காக பல்வேறு அரசியல் மற்றும் திரை பிரபலங்களும் நிதியுதவி செய்து வருகின்றனர்.  
 
இந்நிலையில் நடிகர் விஜய் கொரோனா நிதியுதவியாக ரூ.1.30 கோடி நிதியுதவி அளித்துள்ளார். அதாவது,  
 
பிரதமர் நிவாரண நிதி: ரூ.25 லட்சம்
தமிழக முதல்வர் நிவாரண நிதி: ரூ.50 லட்சம்
கேரள முதல்வர் நிவாரண நிதி: ரூ.10 லட்சம்
பெப்சி அமைப்பு: ரூ.25 லட்சம்
கர்நாடகா முதல்வர் நிவாரண நிதி: ரூ.5 லட்சம்
ஆந்திரமுதல்வர் நிவாரண நிதி: ரூ.5 லட்சம்
தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதி: ரூ.5 லட்சம்
புதுவை முதல்வர் நிவாரண நிதி: ரூ.5 லட்சம்
 
மேலும் ஒரு குறிப்பிட்ட தொகையை ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அனுப்பி ஏழை மக்களுக்கு நேரடியாக உதவி செய்யவும் விஜய் கோரியுள்ளதாக தெரிகிறது. 
 
இதுகுறித்து இயக்குனர் பேரரசு தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, ஒருவரை அவசரப்பட்டு குறை கூறுவதே, மனிதர்களின் பெருங்குறை!தளபதி தானத்தளபதி என்று மீண்டும் நிரூபித்து விட்டார். திராவிடத்தை நேசிக்கும் தமிழனாய் தளபதி மிளிர்கிறார்! தளபதி விஜய்க்கு தலைவணங்கி நன்றிகள் கோடி! என குறிப்பிட்டுள்ளார். 
 
இயக்குனர் பேரரசு விஜய்யின் சிவகாசி, திருப்பாச்சி ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்