உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் உலகம் முழுவதும் நேற்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சமாக இருந்த நிலையில் இன்று 26 லட்சமாக உயர்ந்துள்ளது. தினமும் ஒரு லட்சம் என்ற விகிதத்தில் உலகம் முழுவதும் வைரஸ் மற்றும் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன
உலகம் முழுவதும் 26,38,024 பேர் பகொரோனாவால் பாதிப்பு அடைந்தாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,84,235 என்றும், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7,21,734 என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு அமெரிக்காதான் உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் அந்நாட்டில் மட்டும் 849,092 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், அதேபோல் கொரோனாவுக்கு 47,681 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவை அடுத்து ஸ்பெயினில் 208,389 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தாலியில் 187,327 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரான்ஸில் 21,340 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஜெர்மனியில் 150,648 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.