தல சொன்னா கேட்டுக்க வேண்டியது தான்.. இனி AKன்னு சொல்லுவோம்: பிரபல இயக்குனர்!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (08:25 IST)
நடிகர் அஜித் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்றும் அஜீத் அல்லது அஜித்குமார் அல்லது ஏகே என்று அழைக்கவும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார் 
 
இந்த வேண்டுகோள் குறித்த அறிவிப்பு ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல ஊடகங்களில் இது குறித்து விவாதம் செய்யும் அளவுக்கு இந்த விஷயம் பெரிதாகப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ’திரெளபதி’ உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ததல சொன்னா கேட்டுக்க வேண்டியது தான்.. இனி AKன்னு சொல்லுவோம்’ என்று குறிப்பிட்டு உள்ளார்
 
இதற்கு பெரும்பாலான ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர் என்பதும் இனிமேல் அஜித்தை ஏகே என்றே அழைப்போம் என்று தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்