பாரதிராஜாவுக்கு கொரோனா பாதிப்பு: தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (08:24 IST)
பிரபல இயக்குநர் பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கடந்த சில நாட்களாக திரையுலக பிரபலங்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கமல்ஹாசன் திரிஷா வடிவேலு உள்பட பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது திடீரென இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
இதனையடுத்து அவர் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் குணமாகி விடுவார் என்றும் கூறப்படுகிறது
 
பாரதிராஜா விரைவில் குணமாக வேண்டும் என திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்