தமிழக அமைச்சருக்கு கொரோனா தொற்று: வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார்!

ஞாயிறு, 30 ஜனவரி 2022 (13:29 IST)
தமிழக அமைச்சருக்கு கொரோனா தொற்று: வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார்!
தமிழக அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை பார்த்து வருகிறோம். குறிப்பாக திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழ்நாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தன்னைத்தானே  வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்