வணங்கான் பப்ளிசிட்டி… சூர்யா மனம் புண்படக்கூடாது என பாலா செய்த செயல்!

vinoth
திங்கள், 26 பிப்ரவரி 2024 (08:03 IST)
அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இப்போது முக்கிய வேடத்தில் நடிக்க சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்போது வணங்கான் படத்தை இயக்குனர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இப்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. வசனங்கள் இன்றி விறுவிறுப்பான காட்சிகளோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த டீசர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் வெளியான இந்த டீசர் இதுவரை 8 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு வணங்கான் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை காட்டுகிறது. 

இந்த படத்தில் முதலில் நடித்து தயாரிக்க இருந்தது சூர்யாதான். ஆனால் அவர் இடையில் இந்த படத்தில் இருந்து வெளியேறினார்.  அதற்கு சூர்யா மற்றும் பாலா ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணம் என சொலல்ப்பட்டது. ஆனால் கதை சூர்யாவுக்கு பொருந்தாது என்பதால் விலகிவிட்டதாக சொல்லப்பட்டது. இதன் பின்னர்தான் பாலா, அருண் விஜய்யை வைத்து அதே பெயரில் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் பப்ளிசிட்டியாக வணங்கான் படத்தின் போஸ்டர் வெளியான போது, அதை சூர்யா இருக்கும் தெருவில் மட்டும் ஒட்டவேண்டாம் என பாலா தெரிவித்துவிட்டாராம். அதைப் பார்த்தால் அவர் மனம் புண்படும் என்பதால் இந்த முடிவை அவர் எடுத்ததாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்