துருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது?.. அப்டேட் கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜ்…!

vinoth
சனி, 1 மார்ச் 2025 (08:17 IST)
கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக  2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல பிரச்சனைகளைக் கடந்து கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 24  ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் ஆகவில்லை.

இப்போது வரை அந்த படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் அந்த படம் ரிலீஸாகாததால் சமூகவலைதளங்களில் ஒரு ட்ரோல் மெட்டீரியலாகவே மாறியுள்ளது. ஆனாலும் சமீபத்தில் ‘மத கஜ ராஜா’ திரைப்படம் 12 ஆண்டுகள் கழித்து ரிலீஸாகியும் வெற்றி பெற்றதால் இந்த படத்தின் மீது நம்பிக்கை உள்ளதாக கௌதம் மேனன் கூறியுள்ளார்.

இந்நிலையில் கௌதம் மேனன், சில முன்னணி தயாரிப்பாளர்களோடு சேர்ந்து துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ‘துருவ நட்சத்திரம் படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும்” என அப்டேட் கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்