சீயான் 60 … தன் காட்சிகளை முடித்த துருவ் விக்ரம்!

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (10:48 IST)
நடிகர்கள் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிக்கும் சீயான் 60 படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு வட இந்தியாவில் நடந்து வருகிறது.

விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் நடிப்பில் உருவாகி வரும் ’சியான் 60’ படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் நடந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டது. இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க உள்ளது படக்குழு.

முதல் கட்ட படப்பிடிப்பு எல்லாம் சென்னையில் நடந்த நிலையில் இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு டேராடூனில் ஆரம்பித்து கோவா வரை பல இடங்களில் நடக்க உள்ளதாம். இந்நிலையில் இந்த படத்தில் விக்ரம் கேங்ஸ்டராக நடிக்க உள்ளதாகவும், துருவ் விக்ரம் துடிப்பான இளம் காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்போது வட இந்தியாவில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தன் காட்சிகளை நடித்து முடித்து விட்டாராம் துருவ் விக்ரம். அதையடுத்து அவர் சென்னைக்கு திரும்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்