காரைக்குடிக்கு கிளம்பும் விக்ரம் படக்குழு!

திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (09:57 IST)
விக்ரம் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் காரைக்குடியில் தொடங்க உள்ளதாம்.

கமல்ஹாசன், பஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி முதல் முதலாக இணைந்து நடிக்கும் ’விக்ரம்’ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் கடந்த வாரம் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. சில வாரங்களுக்கு முன்னர் நடந்த முதல் நாள் படப்பிடிப்பில் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.

இந்த படத்தில் ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கும் நிலையில் இந்த மாதம் 20 ஆம் தேதி முதல் காரைக்குடியில் தொடங்க உள்ளதாம். அங்கு முக்கியமாக கமல் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கும் காட்சிகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்