’நானே வருவேன்’ படப்பிடிப்பு நிறைவு: தனுஷ் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (12:10 IST)
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான நானே வருவேன் என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் 
 
மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்றும் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்றதும் கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்