தனுஷ் நடித்துவரும் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகும் திரைப்படத்திற்கு வாத்தி மற்றும் சார் என்ற டைட்டில்கள் வைக்கப்பட்டு உள்லது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளன. இந்த படத்தை வெங்கட் அட்லோரி இயக்கி வருகிறார்.
இந்நிலையில் இன்று வெங்கட் அட்லோரியின் பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ் வாத்தி படப்பிடிப்பு தளத்தில் அவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்த்நாள் வாழ்த்துகள்… கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் எனக் கூறியுள்ளார். அந்த புகைப்படத்தில் தனுஷ் பள்ளி மாணவர் உடையில் இருக்க, அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.