இதுதான் தனுஷ் வெற்றிமாறன் காம்போவின் முதல்படம் – பல ஆண்டுகளுக்குப் பின் வெளியான போஸ்டர்!

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (13:31 IST)
தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் முதலில் தொடங்கப்படுவதாக இருந்த தேசிய நெடுஞ்சாலை படத்தின் போஸ்டர் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான கூட்டணியாக கவனம் பெற்றுள்ளது. அவர்கள் காம்போவில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய நான்கு படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றவை.  இந்நிலையில் இவர்களின் முதல் படமாக பொல்லாதவன் 2009 ஆம் ஆண்டு வெளியானது. ஆனால் அதற்கு முன்னதாகவே தேசிய நெடுஞ்சாலை என்ற பெயரில் ஒரு படத்தை அவர்கள் ஆரம்பித்தார்கள்.

அந்த படத்துக்கு இசை-யுவன்சங்கர் ராஜா, ஒளிப்பதிவு- ஏகாம்பரம், பாடல்கள் நா முத்துக்குமார் என அறிவிக்கப்பட்டது. அந்த படத்தை தனுஷின் சகோதரிகளில் ஒருவரான விமலகீதா தயாரிப்பதாக இருந்தது. ஆனால் பல காரணங்களால் அந்த படம் தொடங்கவில்லை. அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து சித்தார்த் நடிப்பில் உதயம் NH4 என்ற பெயரில் வெற்றிமாறனின் நண்பர் மணிமாறன் இயக்க வெளியானது. இந்நிலையில் தனுஷின் தேசிய நெடுஞ்சாலை படத்தின் போஸ்டர் இப்போது இணையத்தில் வைராகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்