டிடிக்கு போலி கணக்கு, பாவனா கணக்கு ஹேக்: டிவி ஆங்கர்களை குறிவைக்கும் மர்ம நபர்கள்

Webdunia
திங்கள், 13 மார்ச் 2017 (18:53 IST)
விஜய் டிவி தொகுப்பாளினி டிடியின் பெயரில் போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதே போல விஜய் டிவி தொகுப்பாளினி பாவனாவின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. 



 

 
அண்மையில் சுசித்ரா டுவிட்டர் பக்கத்தில் நடிகை, நடிகர்களின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பாடகி சுசித்ரா தனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். ஆனால் அவரது கணவர், சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என கூறினார்.
 
இதையடுத்து தற்போது விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி பெயரில் போலி கணக்கு தொடங்கப்பட்டு அதில் அவரைப்பற்றிய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதைக்கண்டு சுதாரித்த டிடி, இந்த கணக்கு என்னுடையது இல்லை என தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.


 
 
இவரைத்தொடர்ந்து மற்றோரு தொகுப்பாளினி பாவனாவின் டுவிட்டர் கணக்கை ஹேக் செய்து விட்டார்களாம். அவரது பக்கத்தில் சில தினங்களாக சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பதிவாகி வந்துள்ளது. அவற்றை உடனடியாக நீக்கிய பாவனா, எனது முந்தைய டுவிட்களை டெலிட் செய்து விட்டேன். என்னிடம் ஐபி முகரி உள்ளது, இதை செய்தது யாரென கண்டுபிடிக்க போகிறேன்.


 
அடுத்த கட்டுரையில்