ஒரு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் கீர்த்தி சுரேஷ்

Webdunia
திங்கள், 13 மார்ச் 2017 (18:09 IST)
தெலுங்குப் படமொன்றில் நடிக்க, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.



 

 
தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராகத் திகழ்கிறார் கீர்த்தி சுரேஷ். தமிழில் சூர்யா, கார்த்தி ஜோடியாக நடிக்கும் படங்கள் கைவசம் இருப்பதால், தெலுங்கில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். சீனியர் ஹீரோக்கள் என்றாலும் தயங்காமல் அவர் ஒப்புக்கொள்வதால், தெலுங்கு மார்க்கெட் சூடுபிடித்து வருகிறது.
 
இந்நிலையில், பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம்கொண்ட சுரேஷின் மகன் ஸ்ரீனிவாஸ் நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் பேசியுள்ளாராம். பெரிய ஹீரோயின்களே தன் மகனுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படும் பெல்லம்கொண்ட சுரேஷ், சமந்தா, ரகுல் ப்ரீத்சிங்கைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷையும் நடிக்க வைக்கிறார்.
அடுத்த கட்டுரையில்