CWC புகழ் ஹீரோவாக நடித்துள்ள ஸு கீப்பர் படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

vinoth
சனி, 9 மார்ச் 2024 (09:16 IST)
விஜய் டிவியில் பல சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் புகழ். இதன் மூலம் அவர் காமெடியனாக சில படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்னர்  ‘மிஸ்டர் ஸூ கீப்பர்’ என்ற படத்தில் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தை இயக்குனர் சுரேஷ் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படம் முடிந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகாமல் இருந்தது. சில மாதங்களுக்கு முன்னர் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி கவனம் பெற்றது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தை ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக பெரிய படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்