எனக்கு கற்றுக்கொடுத்த கொரோனாவுக்கு ரொம்ப நன்றி - தொகுப்பாளர் விஜய்!

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (09:53 IST)
ஆர்ஜேவாக மீடியா உலகிற்கு என்ட்ரி கொடுத்த விஜய் தற்போது விஜேவாகக் கலக்கிக் கொண்டிருக்கிறார். ரேடியோ மிர்ச்சி FM ஸ்டேஷனில் ஆர்ஜேவாக இருந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பலருக்கும் பரிட்சயமான குரல் தான் ஆர்ஜே விஜய். பிறகு நிகழ்ச்சி தொகுப்பாளர், விருது வழங்கும் விழா என களத்தில் இறங்கி பட்டி தொட்டியெங்கும் தன்னை பரீட்ச்சிய படுத்திக்கொண்டார்.

அதையடுத்து இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் Vs டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனார். இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் டான்ஸ் டிக் டாக், கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது விஜே விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் "அம்மா எப்படி தினமும் இதே போல் இருக்கிறார் என்று எனக்கு இப்போ தான் புரிந்தது. இதுவரை நான் அவரை பெரிதாக எங்கும் அழைத்து போனதில்லை. அவருடைய வலி இன்று தான் புரிந்தது. கொரோனாவுக்கு ரொம்ப நன்றி" என்று  கொரோனா வைரஸின் ஊரடங்கு உத்தரவால் தான் கற்றுக்கொண்ட பல விஷயங்களை குறித்து பேசியுள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ லிங்க் இதோ...

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்