கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டடதை அடுத்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் பல சலுகைகளை மக்களுக்கு அறிவித்திருந்தார். இதற்கு பாரத பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பாராட்டுகள் தெரிவித்தார்.
இந்நிலையில் சில தனியார் வங்கிகள் ஈ எம் ஐ கட்ட தொகையை வங்கிக் கணக்கில் வையுங்கள் என வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.