ஓடிடி தளத்தில் வெளியானது ஆதியின் கிளாப் திரைப்படம்!

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (10:40 IST)
ஆதி நடிப்பில் இசைஞானி இளையராஜா நடித்துள்ள கிளாப் திரைப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது.

நடிகர் ஆதி நடிக்கும் படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ரிலிஸ் ஆகி வருகின்றன. அந்த வகையில் அவர் நடித்துள்ள படம்தான் கிளாப். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஆதியுடன் ஆகான்ஷா சிங், பிரகாஷ் ராஜ், மைம் கோபி, முனிஷ்காந்த் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்த படத்தை பிரித்வி ஆதித்யா இயக்கியுள்ளார். இந்த படம் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஆடியோ உரிமையை லகரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் நேரடியாக சோனி லிவ் தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகும் இந்த படம் ஓட்டப்பந்தய வீராங்கனை ஒருவரை மையப்படுத்தி உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்