லூசிபர் ரீமேக்கை தள்ளி வைத்த சிரஞ்சீவி – காரணம் அஜித்தான்!

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2020 (17:56 IST)
லூசிபர் படத்தின் ரீமேக்கை தள்ளி வைத்து விட்டு வேதாளம் படத்தின் ரீமேக்கில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளாராம் சிரஞ்சீவி.

கடந்த வருடம் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில்வெளியான சூப்பர் ஹிட் படம் லூசிபர். இப்படத்தின் வெற்றியால் மற்ற மொழி படங்களிலும் ரீமேக் செய்யும் ஆர்வததைத் தூண்டியுள்ளது. இதையடுத்து இந்த படம் இப்ப்போது தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. அதில் மோகன் லால் வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார். முதலில் இந்த படத்தை இயக்க ஒப்பந்தமான சுஜித் இப்போது சில காரணங்களால் அந்த படத்தை விட்டு விலகியுள்ளார். இதனால் வேறு இயக்குனரை தேடும் பணியில் உள்ளது தயாரிப்புக் குழு.

இதே வேளையில் அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக்கில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்திருந்தார் சிரஞ்சீவி. இப்போது லூசிபர் ரீமேக்கை பிறகு பார்த்துக்கொள்ளலாம் எனவும் முதலில் வேதாளம் ரீமேக்கை முடிக்கலாம் எனவும் சிரஞ்சீவி சொல்லியுள்ளாராம்.  இந்த படத்தை மெஹர் ரமேஷ்  இயக்க தமிழில் தயாரித்த ஏ எம் ரத்னமுடன் இணைந்து ராம்சரணும் தயாரிக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்